Showing posts with label சோனக மொழிவழக்கு. Show all posts
Showing posts with label சோனக மொழிவழக்கு. Show all posts

நெல்லு கொளமும் பயிராச்சு


பாவப் பழத்திலே பச்சைப் புழு கொண்டுழுந்து
கொட்டை பழுதாகி இரிக்காம்
கொழும்பிலிருந்து மருந்தெடுங்க.

குருத்து செத்த பிள்ளக்கி
குடம் பிடிச்சி தண்ணி ஊத்தி
மடல் விரிச்சி பாளதள்ளி
மறு பேர தேடினென்ன.

சூரிய காந்தியிலே
தோல் செவந்த தேங்காயிலே
தேரை கடிச்சதெண்டு
தெரியல்லயோ மாலவள்ளி.

பூங்கயிலை புளியயிலை எங்க இரிக்கி
பொன்னப்பன் தோட்டத்திலே நிமிர்ந்திரிக்கி
கருக்குப் பனி சேலையிலே கண்ணிரிக்கி
எங்கு மாமாவுக்கும் எனக்குமொரு வழக்கிரிக்கி.

காகம் பழம் அருந்தி
கடவலில கொட்ட போட்டு
பரிசனை செய்யாமல்
பணம் வருமா போடியாரே.

தகுதிவான் எண்ட இடம்
தக்ககொடி சீமான்கள் இண்டவிடம்
போடியார் இண்டவிடம்
போகுண்டவிடம் பாழ்கிடக்கு.

ஓடு பந்தல் போட்டு
ஓழங்கையெல்லாம் பந்தலிட்டு
பண்ணுமந்த கல்யாணத்த
பாக்கவர எண்ணியிருக்கம்.

மாவிலங்க, காசான்
மருந்தெடுக்கும் பூங்கமரம்,
பூவரச பூத்து பொங்கினதோ
மச்சான் உங்க மனம்.

வானத்திலேறி வடிவானதொரு
பொண்ணெடுத்து
பண்ணுங்க மச்சான் பாக்கவர இரிக்கிம்.

பச்ச முல்லை ரெத்தினமே
பாதிநிலா சந்திரனே
மூளை உள்ள மந்திரியே
எனக்கொரு முடிவனுப்ப காணயில்ல.

எங்க மாமிட மக்களெல்லாம்
மயில் பழுத்தாப்போல இரிக்கி
மவுலாக்கு வாழ எங்க மண்டயில எழுதினதோ.

நாயன் இரிக்கான்
எங்கள நாள் தோறும் காத்திடுவான்.
இந்த புல் விளஞ்ச நெல் இல்லாட்டி
எங்களுக்கு ஒண்டுமில்ல.

மாப்பிளட உம்மாவும்
மதினி திலகாவும்
காடு பழுத்து கனியருந்தப் போறாக.

பாவப் பழத்தார பாப்பம்
எண்டு நான் போனன்.
நெஞ்சால மூடி அவக
நித்திரையும் கொள்ராக.

காச்சற் கருப்போ
மச்சானுக்கு கால்நடந்த வேதனையோ,
வேலப் பொறுப்போ மச்சானுக்கு,
வீடு வந்து போறாக.

கட்டக் கால் நோக
கடும் கானல் சூடெழும்ப
வட்ட முகம் வேர்வசிந்த
வந்தயடி எண்ட காலடிய.

விடிய விடிய விடுதி போட்ட மாலடிய
பறையனடிச்சி வந்த மகனார்
பாக்கு செம்பு இல்லயாக்கும்,
சின்னக்கிளி உம்மாவே
எண்ட செல்வ மகளாரே,
பறவைக்கு குடுத்த பாக்கியமும்
இல்லயாகா ஒனக்கு.

தாரமில்லா மாமினாரும்
சலுப்பறியாமலிருக்காரு
எண்ட பொறுதிக் கடலே
பொண்ணளவில் பொறுமை செய்ங்க.

அந்தி விடிஞ்சி
அனுதினமும் நீங்க ஒடிவந்து
குந்தும் அந்த தின்ன
இப்ப கொழருதடா சண்டாளா.


வரு வார் வருவாரெண்டு
வழிகாத்து நான் இருந்தன்.
எண்ட குறிபாத்த நெல்லு கொளமும்
பயிராச்சு.

சீதனம் கேட்டா எண்ட சிங்காரிக்கி பிடிக்காதாம்.

[பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் சோனக மொழியிலமைந்தவை.,யாவும் கற்பனையே]

இருபது வயசில காதலிச்சன்.
அவளுக்கு பதினேழுதான் ஆகிருந்த.
அப்ப யெல்லாம் சும்மா பஞ்சி பஞ்சா கதப்பாள்.
ஈர நெஞ்ச அலப்பாள்.
இப்ப யெல்லாம் நான் அஞ்சி யஞ்சி கதக்கன்.
அவள் வஞ்சி வஞ்சி சினப்பாள்.

கண்ணால பேசின காலமெல்லாம் பெய்த்து.
கையால பேசுவாளாம் ங்காள்.
கேக்கச் செல்லி ஆர செல்ற,
கேட்டுப்போட்டா நாம எல்லாம் செஞ்சம்.

கஞ்சிக்கி வக்கி ல்லாட்டியும்
மத்தவண்ட காசில வாழப்போடா ண்டு
செல்லிச் செல்லி வளத்ததால,
பள்ளிக்கி போகக்கொள காசில ஆசை யில்ல.
பள்ளில படிக்ககொள பாவி மகளோட பழயினது
பொழையா பெய்த்து.
பள்ளிக்குள்ள ஒரயொரய கண்டு கதச்சத்தால
கவுந்திட்டன்.

சீமக்கி படிக்க வரக்கொள
வழியில வந்து நிண்டு சிரிச்சாள்.
சிரிச்சழுத மந்திரம் இப்பதான் விளங்குது.
அப்ப அழகான காசிக்கார ஒண்ட பாத்தா
நல்ல தொழில் கிடக்காட்டியும்
கனக்க காசி கிடைக்கு முண்டு நினச்சன்.
அதோட மாமாக்காரன் கை நிறய ஆதனமும்,
வாழ்க்க நிறய சீதனமும் தருவானுண்டுலா
அவள எண்ட கைக்குள்ள போட்டன்.
இப்ப என்னண்டா அவள்ர காலுக் கடியிலலா
என்ன போடப்பாக்காள்.

அப்சயர் ஊடும், வளச்சி கல்லுச் செவரும்,
நாப்பது ஏக்கர் பூமியும்,
நடுவுல ஒரு தோப்பும்,
மெயின் றோட்டு ஓரத்தில
முண்டு அறயில கடயும்,
அதோட அறுபதடி வளவும்,
அவள ஏத்திக்கிட்டு போக காரும்,
கெடக்கி மெண்டுதான சீமக்கி படிக்க வந்தன்.
மாமாக்காரன் மோட்ட பைக்கலும்
வாங்கித் தருவானுண்டுலா நெனச்சன்.

கனவெல்லாத்தயும் கலக்கிரமாரிலா
இப்ப கதக்காள்.
இதெல்லாம் ஆருக்கெண்டு
அவளுக்கு தெரியாதா?
மச்சான் நான் சாகக்கொள
சந்தக்கொடயா கொண்டு போப்புறன்.

என்ட மயிலழகி,
மாங்கனி மச்சி – நீ
பொர்ற புள்ளயலுக்குத்தனே
புறிக்கப் போறன்.
விளங்காத முண்டக்கண்ணி
ஏன் முனுமுனுக்காள்.

அவளுக்கெங்க தெரியும்,
எங்கு வாப்பாலா சென்னாரு,
அவ் அப்பாக்கிட்ட யிருந்து,
அவ் வாப்பா வறுகினது எக்கச் சக்கமுண்டு.
இவள், அவ் வாப்பா சொந்தமா ஒழச்சதுண்டுலா
நினச்சிருக்காள்.
அவ் சின்னம்மாக்கு ஊடு கட்ட வளவில்லண்டு
அவ் அப்பா கேக்கக் கொள,
இவஉ வாப்பா ஒரு பத்திர கொத்தும்
தரமாட்ட னிண்டயாம்.

நான் சீமக்கி வந்ந பொறகு,
எத்தன பேரு என்ன கேட்டு வந்தண்டு
இவளுக்கு தெரியுமா?
கேட்ட அத்தன யோடயும் மகளையும்
தாறனுண்டு லைன்லலா நிண்ட ஆக்கள்.
நாம முடிக்கிரண்டா அவளத்தா னுண்டு,
அவள்ர கன்னத்துல விழ்ர குழிக்கித்தான
காத்துக் கிடந்த.
இப்ப அவள் பேசுறத கேட்டா
ஈரக் கொலலா நடுங்குது.

சட்டம் படிச்சிப் போட்டு,
சதக்காசி ல்லாம களியாணம் முடிச்சா,
சனம் நம்மள என்னத்த மதிப்பான்.
அபுல் போடிட மகன் அசன்
இஞ்சினியறுக்கு படிச்சவன்,
இஸ்லாத்த பேசித் திரிஞ்சத்தால,
இப்ப அவண்ட பொண்டாட்டிய
பஸ்சிலலா ஏத்திக் கிட்டு போறான்.
நம்மிட காச சும்மா ஏன் பஸ்சிக்கும்
ஆட்டோக் காரனுக்கும் கொடுக்கணும்.
இவளுக்கு இதல்லாம் விளங்கிற ல்லியா?
எப்படி நினச்சிக் கிட்டிருந்த எனக்கி,
இப்படிலா செஞ்சி போட்டாள்.
அவள்ர அழகுல மயங்கினத்த
ஆத்துல போய் விழுந் திரிக்கலாம்.

கடசில அவள்ர மண்டக்கி ஒண்டும்
விளங்காம போக – நானும்
வேற வழியில்லாம,
எல்லாத்தயும் எண்ட பேர்ல எழுதாட்டியும்,
ஓண்ட பேர்ல எழுதி வாங் கிண்டன்.
எண்ட பேர்ல எழுதி வாங்கி
என்ன செய்ய,
எல்லாம் நம்மிட தானே யெங்காள்.

இவளுக் கென்ன தெரியும்,
அவள்ர வாப்பாக் காரன் போனத்துக்கு
பொறகு,
காக்கா காரனும் தம்பிமாரும் சேந்து
என்ன செய்வானுக ளுண்டு.
அவனுகள்ர பேர்ல எல்லாத்தையும் எழுதிப்போட்டு,
பள்ளக் காட்டு பூமிய மட்டும்
இவளுக்கு கொடுப்பானுகள்.

ஓண்டும் விளங்கு தில்ல இவளுக்கு.
எடுக்கிற சம்பளத்த
எத்தன நாளக்கி செலவளிக்கலாம்.
பூமி கொஞ்சம் இருந்தாத் தானே
குத்தகைக்கி கொடுத்தாச்சும் ஒழக்கலாம்.
துகைன் மெனஜர்ர மருமகன்
ஓட்டாண்டியா திரிஞ்சா,
மாமாக் காராள ஊரில யிருக்கிறவன்
என்னத்த கதப்பான்.

இதுக் கங்கால அடுத்த பிரச்சன,
இவள்ள இந்த கத யெல்லாம்
எங்கு வாப்பாக்கு தெரியா.
ஏன்ன கேட்டு வரக் கொள யெல்லாம்
நான் பிடிச்சது புளியங் கொம்பு ண்டு நெனச்சித்தான்
பேசாம ருந்தாரு.
இது அவருக்கு தெரிஞ்சா
வேற பொண்தான், வேற வழியில்ல.

இந்த காதல் கத்தரிக் காயெல்லாம்
அவருக்கு தெரியாது.
என்ன படிப்பிச்ச காசெல்லாம்
பேங்கு புத்தகத்தில போட்டு வெச்ச மாரி,
ஒரே யடியா களத்து றத்துக்கு,
எப்பண்டு க்கிட்டிருக்காரு.
சீதனம் வாங்காட்டி ஊருல இருக்கிற
மதிப்பு கொறஞ் சிடுமாம்.
சீதனமா வாங்குற காசி முப்பது லெட்சத்துல
கொழும்புல ஊடு ஒண்டு வாங்கினா
வாடகைக்கி கொடுக்கலாம், அதோட
நாம போனாலும் நிண்டு வாறத்துக்கு
இடம் ஒண்டிருக்கு மெண்டு செல்லுவாரு.

எங்கு உம்மாட கத அது வேற.
பக்கத் தூட்டு சக்கினா லாத்தாவும்,
செமிலத்து ம்மம்மாவும்,
பாத்துட்டு வந்த பொண்ணு,
அவ்வளவு அழகி ல்லாட்டியும்,
கொழுப்புல ஒரு ஊடும், நல்ல ஆதனமும்,
குடும்பத்துல நல்ல அன்புமிருக்கா மிண்டு
ஒரே முனு முனுப்பு.
தாங்கேலாம யிருக்கு.

இதெல்லாம் எண்ட சீறிப் பாயிர
சிங்காரிக்கி தெரியுமா?
உங்கட படிப்பு எப்ப முடியுது,
எப்ப முடியுது ண்டு அரிக்கிறவள்,
இப்ப மொறச்சிலா பாக்காள்.
மொறச்சி பாத்தாலும்,
முத்துப் போலத்தா னிரிக்காள்.
இப்ப அவ் உம்மா வாப்பாட செல்ல கேட்டு,
வெறச்சிப் போய்லா கதக்காள்.

இதுக் கெடயால எங்கு மாமா,
சாப்பிர்ற நேரம் போனா,
மத்த நேரமெல்லாம் எங்கிட ஊட்டான் கிடக்காரு.
இந்த பிரச்சன யெல்லாத்தயும் வெச்சி,
அவர்ர மகள்ர தலயில என்ன கட்டியு ர்றத்துக்கு
பாக்காரு.

எங்கு வாப்பா,
சீதனமி ல்லாம பொண் ணெடுக்க விருப்பமில்லாம,
முன்னய, அவருக் கிட்ட 'குடும்பத்தில பொண் ணெடுத்தா
கொதறத்து கூட' ண்டு சொன்னாலும்,
கேக்கிற மாரித் தெரியல்ல.
அடிக்கடி செப்பு பேக்கு தூள் கிளம்புது.
ஒறவு முறிஞ்சா செப்பெல்லாம் திரும்ப கட்டணு முண்டு
எங்கு ம்மாக்கு பெரிய தலயிடி.

ஆதனாலதான், எண்ட அவள்ர ஊட்டுல யிருந்து
யாரையும் இப்ப வர வேணா முண்டு செல்லிரிக்கா
எங்கு ம்மா.
இதெல்லாம் தெரியாம இவள்,
திரும்ப திரும்ப இதப் பத்தி பேசினா
கலியாணமே எனக்கி வேணா முண்டுலா
செல்றாள்.
காதலிச்ச பாவத்துக்கு நம்மிட கதி
இப்படித்தான் போகணு முண்டு எழுதியிருக்கு.
ம்......காதலிக்காம யிருந்திருந்தா ஒரு கதையு மில்ல,சொள சொளயா வாங்கி யிரிக்கலாம்.
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger