கடந்த 24.07.2009 வெள்ளி நள்ளிரவளவில் பேருவளை, மககொடவில் அமைந்துள்ள பள்ளிவாயல் முற்று முழுதாக தீக்கரையாக்கப்பட்டதுடன்; அங்கு பிரசன்னமாகியிருந்த பலர் மிகவும் காரமானதும் கொடுரமானதுமான வாள் வெட்டு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டனர். இருவர் மிருகத்தனமான முறையில் வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். இதனை எமது ஊடகங்கள் பலவேறு வகையில் சித்தரித்து வெளிப்படுத்தியிருந்தன.
இஸ்லாம் ஒரு சாந்தி மார்க்கமாகும். இது எப்போதும் வன்முறையினை ஆயுதமாக பயன்படுத்தியதாக சரித்திரமில்லை. காரணம், அது ஓரிறைக் கொள்கையின் கீழ் ஒன்றுபட்டு கிடக்க போதிக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் ஒரே இறைவனை பரிபூரணமாக ஏற்று அவனே கதியென்று தமது வாழ்வின் செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்ற போது அவன் ஒரு முஸ்லிமாக கருதப்படுவான் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது. இவ்வாறு ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாவர். ஒரு முஸ்லிம் ஒரே இறைவனை ஏற்றுக்கொள்வதுடன் மட்டுமல்லாது அவனது வழிகாட்டுதல்களை உரியமுறையில் பின்பற்றி நடப்பானாகில் அவன் கீழ்ப்படிவுடைய நம்பிக்கையாளன் என அழைக்கப்படுவான். இங்கு முஸ்லிம் என்கின்ற தராதரத்தில் எவ்வித வித்தியாசங்களும் வேறுபாடும் கிடையாது. மாறாக, நம்பிக்கையாளர் என்கின்ற தராதரத்திலேயே ஒவ்வொரு முஸ்லிமும் தகுதி காண் பரீட்சைக்குட்படுத்தப் படுகின்றான். இப்பரீட்சையை எதிர் கொள்கின்ற ஓவ்வொரு நம்பிக்கையாளனும் தத்தமது செயற்களுக்கு ஏற்ப கூலியினை பெற்றுக்கொள்கின்றனர்.
இன்று எமது சமூகம் தமது செயற்களை ஒழுங்கானதாகவும் நேர்மையானதாகவும் அமைத்துக்கொண்டு பிற சமூகத்தவருக்கு வழிகாட்டியாக இருப்பதனை விட்டுவிட்டு தங்களுக்குள்ளேயே வெட்டுக்குத்துக்களில் ஈடுபடுவது வேடிக்கையாகவுள்ளது. சில அமைப்புக்கள் இதனை கருத்திற்கொள்ளாது ஆண்டாண்டு காலமாக தமது நடவடிக்கையினை சுய இலாபத்தினை மட்டும் கருத்திற்கொண்டதாக செயற்படுத்தி வருதனை இங்கு மறக்க முடியாது. இஸ்லாத்தினை பேசுகின்ற இவர்கள் இதன் அடிப்டைகளை மறந்துவிட்டு செயல்படுவது அவர்களுக்கிருக்கின்ற அசட்டு துணிச்சலை மட்டும் வெளிக்கொணர்வதாகவே அமையும். ஒரு முஸ்லிம் சத்திய பாதையினை விட்டும் விலகி நடக்கும் போது சாந்தமான முறையில் அதனை போதிக்குமாறு இஸ்லாம் கூறுகின்றது. ஆனால் இன்று அனேகமான சத்திய பிரச்சார மேடைகள் தமது சகோதரர்களையே தூசிப்பதாhகவும், தூற்றுவதாகவும், மானபங்கப்படுத்துவதாகவும் காணப்படுவது இச்சமூகத்தின் மிகப்பெரும் இழுக்காகும். அழகாகவும் அறிவார்த்தமாகவும் அதேவேளை சாந்தமாகவும் சொல்மழை பொழிய வேண்டிய எமது பிரச்சார மேடைகள் இன்று வசைபாடும் இடமாக மாறிக்கிடக்கின்றது.
பொதுவாக, சத்தியப்பாதையில் செல்கின்றோம் என தங்களை மெச்சிக்கொள்ளும் நாம் பாதை சறுகிச் செல்பவர்களை நியாயமா நடக்க எதிர்பார்ப்பது முட்டாள்தனமான சிந்தனையாகத்தான் இருக்க முடியும். எனவே மாற்றம் என்பது எமது அணுகுமுறையில்தான் தேவையேயன்றி அவர்களிடமில்லை. ஒவ்வொரு அமைப்பினரும் தமது அமைப்பிற்கு ஆட்கள் சேர்ப்பதில் இருக்கும் அக்கறையை இம்மியளவாவது தமது சகோதரனது கொளரவத்திற்கு மதிப்பளிக்கும் விடயத்தில் செலுத்த வேண்டும். சொல் வீரர்களாக இருந்தால் மட்டும் போதாது செயல்வீரர்களாகவும் தங்களை கட்டமைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். சத்தியப்பாதையினை நோக்கிய பயணம் முழுநிறைவானதாகும். அதனை முழுமையற்ற விதத்தில் அணுக முயற்சிப்பது உசிதமானதல்ல. இஸ்லாம் எப்போதும் நாகரீகங்களை, அவை சார்ந்த கலாசாரத்தினை புறக்கணித்தது கிடையாது. பண்பாட்டின் அடிப்டையில் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு சமூக வழக்கத்தினை சவாலுக்குட்படுத்துகின்ற வேளை அச்சமூகம் தமது இருப்பினை நோக்கிய சவவாலாக அதனை ஊகித்துக்கொள்வதும், சிந்திக்க முற்படுவதும் இயல்பு. எனவே அதனை மிகவும் வேறுபாடான அணுகுமுறைகளையும், யுக்திகளையும் கையாள்வதன் மூலமாகவே அன்றி, எடுத்த மாதிரத்தில் சாதிக்கவியலாது. சமூகம் மீதான ஒவ்வொரு பாய்ச்சலும் சறுக்கு மரம் போன்றது. தவறினால் சுருக்கு கயிறை தவிர வேறு வழி இருக்காது என்பதற்கு நிறைவேறியிருக்கின்ற சம்பவம் பெரும் சான்றாகும்.
மறுபுறம், எமது முஸ்லிம் ஊடகங்கள் கூட ஏனைய பிற ஊடகங்களில் குறிப்பிடப்பட்ட செய்திகளை சுட்டிக்காட்டியிருந்தனவே அன்றி, அவைகளின் காழ்ப்புணர்வான இயங்குதலை நிரூபிக்க முற்பட்டனவே இன்றி, தற்கால நிலமையில் முஸ்லிம் சமூகத்pன் நிலைப்பாடு என்ன? அதன் பங்கு என்ன? இந்நிலமைக்கு வழிகோலிய காரணிகள் எவை? என்பன பற்றி ஆழமாக தேடல் செய்திருக்கவில்லை. வழமை போன்று ஒவ்வொரு பத்த்pரிகைகளும் தமது தலைப்பிடலில் பல்வேறு தர்க தந்திரங்களை பேணியிருந்தன. இது பத்திரிகை துறையில் காணப்படுகின்ற வியாபார தந்திரம். இதற்கு எந்தவொரு ஊடகத்துறையும் விதிவிலக்கல்ல. இதேவேளை, எமது சமூகம் சார்ந்து பேசுகின்ற ஊடகங்கள் என தங்களை வெளிப்படுத்தியிருக்கின்ற சில நிறுவனங்கள் கூட இதனை மறுகோணத்தில் பயன்படுத்தியிருந்தன என்றே எனக்கு தோன்றுகிறது.
மேலும், முஸ்லிம் வோட்ச் இணையதள குழுமத்திலும் புலமையாளர்கள் சிலர் இதனை வெகுவாக விமர்சித்திருந்த போதும் கூட அவை திருப்திகரமானதாக இல்லை. காரணம் இவர்கள் சம்பவம் தொடர்பான தமது கருத்தாடலை அரசியல் தலையீடு அல்லது அரசியல் செல்வாக்கு என்ற ஒரு குறுகிய வட்டத்pனுள் மட்டுப்படுத்தியே வருகின்றனர். மாறாக இவர்கள் தமது கருத்தாடலை இது போன்ற பிரச்சினைகளை மிகவும் இலாவகமாக எதிர்காலத்pல் முகாமைப்படுத்துவதற்கான திட்டங்கள் என்ன? சம்பவத்தின் அடிப்படைகள் என்ன? சமூகத்த்pல் ஏற்படவேண்டிய மாற்றங்கள் எவை? சமூக நிறுவனங்கள் எத்தகைய பாங்கில் ஒழுங்கமைக்கப்படல் அவசியம்? போன்றன பற்றி செறிவாக முன்கொண்டிருந்தால் பரந்ததொரு கருத்தாடலாக அவை மாறியிருக்கும்.
நடந்து முடிந்த கோரச் சம்பவமானது, ஓரிறைக் கொள்கைக்கும் அதன் அடிப்டை அம்சங்களுக்கும் புறம்பாக தமது இயங்கியலை அமைத்துக்கொண்டதன் அறுவடையாகும். இருதரப்பினரும் பரஸ்பரம் இஸ்லாத்தினை, அதன் வழிகாட்டலினை மறந்து செயற்பட்டதன் விளைவாகவே இதனை கருதத்தோன்றுகிறது. பொதுவாக சத்தியப்பிரச்சாரம் அறிவார்த்தமானதாகவும், மிகவும் அன்பான அரவணைப்பின் மூலமும் மெயப்பிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இறைவன் கிழ்ர் அவர்களைப் பற்றி கூறுகையில்,
'அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரை கண்டார்கள். நூம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபையை அருளியிலுந்தோம், இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தினையும் கற்றுக் கொடுத்திருந்தோம்'. (க-அப்: 65)
எனவே, சத்திய பாதையில் பயணிக்கும் ஒருவர் முஸ்லிம் இத்தகைய இரு சிறப்புக்களையும் அறுவடை செய்வது இன்றியமையாததாகும். நாம் எப்போதும் தவறு செய்யும் பாங்கிலேயே படைக்கப்பட்டுள்ளோம். எல்லா வேளையும் ஒருவர் நல்லவனாக இருக்க முடியாது. ஒவ்வொரு கருத்துக்களும் அவை எவரிடமிருந்து வரினும் ஏற்றுக்கொள்ளப்படவும், அதேயளவு மறுக்கப்படவும் நிகழ்தகவுண்டு. ஆனாலும், எல்லா முஸ்லிமும் எப்போதும் அசத்தியத்திலேயே நிலைத்திருக்கும் நிலமை எப்போதும் இடம்பெறாது. இங்கு நாம் இஸ்லாத்தின் குறிக்கோளான நம்பிக்கையினாலும், வழிகாட்டலினாலும் மனங்களை ஒன்றுபடுத்துகின்ற செயற்திட்டத்தை மெய்ப்பிக்க முயற்சிக்க வேண்டும். நேரான பாiதையினை நோக்கி மக்களை அழைப்பது தொடர்பில் உண்மையாளர்களாக திகழ வேண்டும்.
இந்தவகையில் எமது இளம் சத்திய அழைப்பாளர்கள் மக்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி கற்றுக்கொள்ளல் அவசியம். சாந்தி மார்க்கத்தினை பின்பற்ற எத்தணிப்பவர்கள் யார்?, எவர்கள் இறை தூதர் அவர்களின் வழிகாட்டலை பின்பற்றும் கருத்தினை கொண்டிருக்கின்றனர்?, அவர்களது பின்பற்றலுக்கான முடியுமாந்தன்மை எவ்வளவானது? போன்றன இவர்களுடைய பணியினை வினைத்திறனுடையதாக்கும். அழைப்பாளர்கள் இறைவனுக்கு கீழ்ப்படிந்தவர்களாக ஒன்றுபட்டு சத்தியத்தின் பால் அழைப்பு விடுக்க வேண்டும். எவர்கள் தமக்குள் தவறுதலாக நடக்கன்றனரோ, அவைகள் தெளிவான சான்றுகளால் நிரூபிக்கப்படுவது மட்டுமல்லாது மிகவும் அன்பானதும் கௌரவமானதுமான வழியில் திருத்தப்படல் வேண்டும்.
நாம் மக்களை சத்தியத்தின் பால் அழைக்க வேண்டியிருப்பதனால், சத்தியம் மற்றும் அசத்தியம் பற்றி தெளிவானவர்களாக இருத்தல் அவசியம். நாம் மக்கள் விடுகின்ற தவறுகளை அசாதாரணமான வகையில எந்த நிலையிலும் விமர்சிக்க கூடாது. திருமறையினையும், இறை தூதரின் வழிகாட்டுதலையும் பின்பற்றுவதாக கூறிக்கொள்கின்ற எமது அழைப்பாழர்கள் இறுமாப்புடனும், காழ்ப்புணர்வுடனும் தொழிற்படுவது வேதனையளிக்கின்றது.
நாம் ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதுடன், எமது முன்சென்ற அறிஞர்களையும் மதிக்க வேண்டும். இதேவேளை ஏனையவர்களுடைய கருத்துக்களுக்கும் கௌரவமளிக்க வேண்டும். எமக்கு இறைவன் அளித்திருக்கின்ற வழிகாட்டலையும், இறை தூதரின் போதனையையும் மறந்து செயற்படலாகாது. இறைதூதர் எமக்களித்ததே மார்க்கமாகும். மாறாக, அறிஞர்கள் எமக்கு விட்டுச் சென்றவையல்ல. அதற்காக, அவர்களுடைய கருத்துக்கள் விமர்சிக்கப்படற்பாலது என்று அர்த்தமில்லை. இறை வழிகாட்டலுடன் ஒப்பிடுகையில் அறிஞர்களது கருத்துக்கள் சில வேளை நிராகரிப்பிற்கோ, மீளாய்வுக்கோ உட்படலாம். இவை அழைப்பாளர்களாக தொழிற்படுகின்றவர்களது கடமையாகும்.
மனிதனுக்கிருக்கின்ற மதிநலம் காரணமாக இஸ்லாம் அவனுடைய வாழ்வின் அற்ப சொற்ப விடயங்களையெல்லாம் கூறி வைக்கவில்லை. நாம் அவை பற்றி மக்களை அழைக்கின்ற வேளை நுட்பத்துடன் கருத்தூட்டல் செய்தல் அவசியம். குறுகிய மனப்பாங்கில் செயற்படக் கூடாது. எடுத்துக்காட்டாக, சில அழைப்பாளர்கள் தமது பணியினை அரசியல் நோக்கில் கவனப்படுத்தியுள்ளனர். இவர்கள் நாட்டிலுள்ள முஸ்லிம்களினதும், சர்வமெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்களினதும் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக மையப்படுத்தியும், அரசியல் தீர்வை நோக்கியதாகவும் உருவகப்படுத்துகின்றனர். இதுவும் குறுகிய மனப்பாங்குடையதுதான்.
மேலும், மக்களை பக்தியின் பால் அழைக்க மட்டும் விரும்புகின்ற அழைப்பாளர்களும் இல்லாமலில்லை. இவர்கள் மிகவும் அற்பமான சிறிய தவறுகளை பற்றி வினைத்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டி அவர்களை போதிக்கின்றனர். இதே நிலமையில், இஸ்லாத்தினதும், அதன் நம்பிக்கைகள் பற்றியும் எடுத்தியம்புவதை மறந்துவிடுகின்றனர் அல்லது மறத்துவிடுகின்றனர் எனலாம்;. பெரும்பாலான அழைப்பாளர்கள் இதற்காக வருந்துகின்றனர். காரணம், அழைக்கப்படுகின்றவர்களிடம் இருந்து வருகின்ற எதிர்மறையான பிரதிபலிப்புக்களாகும். இவை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட குறித்த வகுப்பினருக்கு சாதகமாயமைவதுடன், அவர்கள் மேலும் சாதாரண முஸ்லிம்களுக்கு எதிரான குரேதங்களில் ஈடுபடவும் தூண்டி விடுகின்றது. மொத்தத்தில் இவ்வணுகு முறை சமூகத்திற்கு எந்த பலனுமமளிக்காது. இத்தகைய அழைப்பாளர்கள் ஏனையவர்களிடம் அறுவடை நிகழ்த்தக் கூடிய நல்ல பல விடயங்களை தொலைத்துவிடுகின்றனர்.
அழைப்பாளர்கள் தமது நடைமுறை தொடர்பிலாக தெளிவான மன நிலையில் இருத்தல் வேண்டும். முதலில், இஸ்லாத்தின் எந்த விடயம் எதிர்க்கப்படக் கூடியது, மேலும் எவை பல்கோண அணுகுதலுக்கும், வேறுபாடான கருத்துக்களுக்கும் திறந்து விடப்படக் கூடியது என்பன இங்கு அவசியம் கருத்திற்கொள்ளப்படுதல் வேண்டும். இவைகளை பிரித்தாராய்வது இஸ்லாமிய சட்டத்தின் இன்றியமையாத அம்சமொன்றாகும்.
சிலை வணக்க நம்பிக்கையில் அளவுகடந்து சீர்கெட்டுக்கிடந்த சமுதாயத்திற்கே இறை தூதுவர்களும், நபிமார்களும் அனுப்பப்பட்டனர். இவர்கள் யாவரும் தூதர்களின் பாதச்சுவடுகளை அடியொற்ற வழிகோலியது அவர்கள் கைக்கொண்ட நுணுக்கங்களான ஒவ்வொருவருடனும் பேசுவதற்கு தயாரானதும், யாம் எல்லோரும் இறைவனின் சிருட்டிகள் என்ற கருத்துக்களாகும். அவர்கள் அனைவரும் நேர் வழியின் பால் அழைக்கப்பட்டனர். இவ்வாறான பாரிய பொறுப்பினை முன்னெடுக்க இஸ்லாத்தினை நோக்கிய எமது அழைப்பாளர்களின் பணி மிகவும் பொறுமையுடையதாக அமைதல் வேண்டும். எங்கு அவர்கள் வேறுபாடானதும், மாறுபாடானதுமான கருத்துக்களுக்கும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனரோ அங்கு அவர்கள் சகிப்புணர்வுடனும், எங்கு அவர்கள் வித்தியாசமான அணுகுமுறைகளுக்கு ஆட்படுகின்றனரோ அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து கௌரவமாகவும் தொழிற்படல் காலத்தின் கட்டாயமாகும்.
0 comments:
Post a Comment