'நாகரீகமானது இரு துருவங்களுக்கிடையில் மெதுவாக நகர்ந்து செல்கின்ற ஒன்று"
ஒரு புறம்; துன்புறுத்தல்கள், உதாசீனம் மற்றும் துர்நடத்தைகள் என்பனவற்றிலிருந்து விடுபட்டு சுதந்திரம், புனரமைப்பு என்பன பற்றி அதிகம் கருத்திற்கொள்ளும் தற்போதைய இலங்கையில், இடம்பெறவிருக்கின்ற சனாதிபதி தேர்தலினை வில் டியூங்ன்ட் என்ற புகழ்பெற்ற வரலாற்றாசிரியரின் மேற்கூறிய கருத்துடன் விளங்கிக்கொள்ளலாம்.
இதுவரையில் உள்நோக்கம் நிறைந்ததாகவும், புதையுண்ட மர்மங்களாகவும் காணப்பட்டவை தொடர்பில் சடுதியாக அரசாங்கத்தினால் காட்டப்படுகின்ற ஆர்வமும், அதேவேளை மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற காரூண்ய நடவடிக்கைகள் பற்றியும் நாம் கூறுவதற்கு என்ன இருக்கிறது.
மே, 2009 உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற பின்பும் சுமார் ஏழு மாத காலமாக வட பகுதி பிரதேசமானது இராணுவ மயப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு பிரதேசமாகவே இருந்தது. தற்போது அதே அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கவும், இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களை மீளக் குடியமர்த்தவும், அத்தோடு A9 வீதி தொடர்பில் காணப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கவும் முன்வந்திருக்கின்றது. நேற்று வரை வேசி இன்று ஆசைக் காதலியான கதை.
யுத்தம் நிறைவுற்ற பின்னர் அரசாங்கம் சிறுபான்மையின மக்களுக்கான அரசியல் அதிகார பகிர்ந்தளிப்பினை மேற்கொள்வதனை உதாசீனப்படுத்தியே அல்லது அவை பற்றி நழுவல் போக்கினையே கடைப்பிடித்து வந்திருந்தது. நாங்கள் காலம் வரும்வேளை அவற்றினை மேற்கொள்வோம் (We were told everything would be sorted 'in good time'). பதிலாக சிறுபான்மையின மக்களின் இருப்பானது தொலைத்துவிடப்பட்டிருந்தது. சடுதியாக, எமது அதே சனாதிபதி இன்று கூவல் விட – தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர் பெருமக்கள் 'அடேயப்பா, அருமையான வாக்குறுதி".
கடந்த ஆண்டில், பொதுச் சேவை ஊழியர்களின் சம்பளத்தினை அதிகரிக்க போதுமான பணம் அரசாங்க இறையில் இல்லையென அமைச்சர்களும், அதன் முக்கியஸ்தர்களும் கூறி வந்தனர். இன்னும், தற்போது இறைத் திணைக்களத்தின் அதேநபர்கள் பொது ஊழியர்களது சம்பளத்தினை 2500 ரூபாவினால் அதிகரிக்க தேவையான வழியினை கண்டுபிடித்துள்ளனர்.
மார்கழி, 2008 ம் ஆண்டு, உலக சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை மாற்றத்தினை கருத்திற்கொண்டு உச்ச நீதிமன்றம் ஒரு லீட்டர் பெற்றோலின் விலையினை 100 ரூபாவுக்கு குறைத்திருந்த வேளை, அதனை அரசாங்கம் தெளிவாகவே அமுல்நடாத்த தவறியருந்தது. ஆனாலும், மார்கழி, 2009 அது குறித்த விலையினை அண்மித்திருந்தது. ஒரு லீட்டர் பெற்றோலின் விலை சட்டென 115 ரூபாவுக்கு குறைக்கப்பட்டது. உலக சந்தையில் விலை சுட்டி மேலெழுந்து செல்வதனைக் கூட கவனித்திருக்கவில்லை....
இவ்வடையாளங்கள் யாவும் சனநாயகமாக்கலின் பிரதிபலிப்பா – தேர்தலின் எதிரொலிப்பா?
தமது வார்த்தைகளை தாமே உண்டு விழுங்குகின்ற போதும் அல்லது தமது முகங்களை திருப்பிக்கொள்ள முனைகின்ற தருணத்திலும், சிலர் இந்த அரசாங்கத்தின் சுழல் பந்து வீச்சாளர்களுடனும், வாய்ச்சொல் வீரர்களுடனும் மோதிக்கொள்கின்றனர். தற்போது நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு இவர்கள் அளிக்கும் விளக்கங்கள் மனங்களை வசீகரிக்கும் வாதங்களாயும், இறுக நெரிக்கப்பட்ட தர்க்கங்களாகவுமே உள்ளன.
இவைகள் தேர்தலுக்காக வழங்கப்பட்ட வெறும் கொத்தும் குழைகளும் அல்ல என்பதனை அவர்கள் கூறிவருகின்றனர். அவ்வாறு அவர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இத்தகைய நிலமையில் எங்களை (20 மில்லியன் மக்களை) வைத்திருந்தமைக்காக மிக்க வருத்தப்படுவதாயும் மனம் வருந்துகின்றனர். ஆனால் எம்மோடு அளவளாவுகின்றனர், மக்களே: இன்றிலிருந்து, கவலை வேண்டாம்...
என்றுமே கவலைகொள்ளாத அரசாங்கத்தின் மக்கள் நலம் பற்றிய திடீர் மனமாற்றத்தினையும், கனிவான நடவடிக்கைகளையும் பற்றி நாம் என்னதான் கூறி விளக்க முடியும்? நிச்சயமாக, அது இதயங்களில் தட்பவெப்ப நிலையை வெளியாக்கும், அதிகம் அச்சம் உண்டாக்கும் பச்சை வீட்டு விளைவாக இருக்காது.
இங்கு பொன்சேகாவின் தாக்குதல் எனக்குறிப்பிட மற்றொரு காரணமும் உண்டு.
அறியாமையின் வட்டத்தினுள் இத்தாக்குதலானது மிகவும் அபாயகரமானது. இதனால், பூகோள வெப்பமடைதலினை விட மிகவும் உக்கிரமாக இருக்கும். (நீங்கள் இவற்றை நம்பமாட்டீர்கள் எனில் எமது பெருமூச்சு விடும் சூழல் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டறிந்து கொள்ளலாம்!).
தற்போதைய சனாதிபதி தேர்தல் தடாகத்தினுள் பொன்சேகா குதித்துள்ளமை பல்வேறு அரசியல் அதிசயங்களையும், அதிர்ச்சியான விளைவுகளையும் தோற்றுவித்துள்ளது என்பதனை நாம் ஏற்றுக்கொள்வோமானால், எதிர்வருகின்ற தேர்தலில் அவரளவில் காணப்படுகின்ற கொள்கை ரீதியிலான சவால்கள் நமது சமூக மற்றும் அரசியல் பரிமானங்களை மாற்றீடு செய்துள்ளது என்பதனையும் கூடவே ஏற்றுக்கொள்ளல் வேண்டும். தற்போதைய அரசாங்கம் (ஏப்ரல் 2004 லிருந்து பதவியில்), அதன் தலைவர் சனாதிபதி (நவம்பர் 2005 லிருந்து) போன்றவர்கள் சாதாரண குடிமக்களின் துரதிட்டவசமான நிலையினை தற்போதைய அளவிற்கு ஒரு போதும் கவனத்திற்கொண்டிருக்கவில்லை. இதேபோன்றே சட்டம் மற்றும் நீதி தொடர்பிலும் - தற்போது அவர்கள் மேற்கொள்வது மாதிரியாக.
கையிருப்பானது அவ்வளவு கணிசமான தொகையாக இல்லாவிட்டால் இவையெல்லாம் மிகவும் கோமாளித்தனமாகத்தான் இருக்கும். அத்தோடு எதிர்கொள்ளவிருக்கும் தடைகளும் தொல்லைகளும் மக்களுக்கு பாரிய சுமையாக அமையும். தற்போது மக்களுக்காக வழங்கப்;படுகின்ற பாசாங்குகள் எல்லாம் மிகவும் சொற்பமானதும், காலம் தாண்டியதும்தான்.
ஆனால் அரசாளும் சுயநலவாத ஆட்சியாளர்களின் நடைமுறைகளை பொன்சேகாவின் தாக்குதல் அழித்தொழித்திருக்கின்றது என்பதனை நிராகரிக்க முடியாது. நிச்சயமாக இத்தாக்குதலுக்கு நிகராக துண்டங்களாய் நறுக்கப்பட்டுக் கிடக்கின்ற மலட்டு எதிர்க்கட்;சியினால் இதனைத்தவிர மேற்கொள்ள முடிந்த தாக்குதல் ஒன்றுமில்லை.
எனவே, இறுதித்தீர்ப்பு நாளில் சிறியதொரு கடதாசியில் (அவ்வாறானதல்ல), சாதாரண பென்சிலின் கூரிய முனையினால் அடையாளமிட வாக்குச் சாவடிக்கு செல்லும் ஒரு பாமர மகன் எதனை தேர்வு செய்யவிருக்கின்றான்? இதுதான் தகுதிவாய்ந்த வாக்காளனுக்கு மிகவும் இரகசியமானதும், கண்டிப்பாக தனிப்பட்டதுமாக இருக்கவேண்டிய விடயம்.
தேர்தலுக்கான நாட்களின் எண்ணிக்கை குறையக்குறைய அதன் தட்பவெப்ப நிலையும், காரூண்யமான பக்கவிளைவுகளையும் நாம் அவதானிக்கின்றோமா? பொது நலன் சார்பில் தொழிற்படுகின்ற சமூக தொண்டர்களுக்கும், வர்த்தக சங்கத்தினருக்கும், ஏனைய தொழிற்சங்கவாதிகளுக்கும் இதுதான் தருணம். தருணத்தினை பயன்படுத்தி எப்போதும் நீளமான கைகளுடன் காத்திருக்கின்ற அரசாங்கத்திடம் தமது தேவைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து பெறவேண்டியதனை பெற்றுக்கொள்வதுதான் வேறென்ன.
0 comments:
Post a Comment